fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பீஸ்ட் படத்திற்கு எச்சரிக்கை விடுத்த கேஜிஎஃப்-2.. அனல் பறக்க வெளிவந்த Toofan விடியோ

kgf-2-toofan-song

Videos | வீடியோக்கள்

பீஸ்ட் படத்திற்கு எச்சரிக்கை விடுத்த கேஜிஎஃப்-2.. அனல் பறக்க வெளிவந்த Toofan விடியோ

யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தினை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கே ஜி எஃப் படத்தினை 5 மொழிகளிலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரம்மாண்டமாக எடுத்துள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் எனவும் கண்டிப்பாக இப்படம் வெளியானால் வசூல் சாதனை படைக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் லிரிகல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. Toofan என்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். தளபதியின் பீஸ்ட் படத்துடன் இந்த படம் மோத உள்ளதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் ரீதியாக அதிக போட்டிகள் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க.. என்பது போன்ற வரி அதில் எழுதப்பட்டுள்ளது. இதைக் கேட்கும்போது தளபதியின் பீஸ்ட் படத்திற்கு எச்சரிக்கை விடுவது போன்று உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top