யமுனா செய்த காரியத்தால் விஜய் எடுக்கப் போகும் முடிவு.. நிம்மதி இல்லாமல் தவிக்கும் நவீன் காவிரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், சுயநலவாதியாக இருக்கும் யமுனா எப்படியாவது நவீனை கல்யாணம் பண்ண வேண்டும் என்று தொடர்ந்து டார்ச்சர் பண்ணினார். யமுனாவின் தொந்தரவை தாங்க முடியாத நவீன், நான் இன்னும் காவிரிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். காவிரி தான் என் மனதில் இருக்கிறார், கூடிய சீக்கிரத்தில் அவளே என்னை தேடி வருவாள் என்று சொல்லிட்டார்.

ஆனால் நவீன் சொன்னது எதைவைத்து என்றால் விஜய் மற்றும் காவிரி ஒப்பந்தம் படி தான் திருமணம் பண்ணி இருக்கிறார்கள். அதுவும் காவிரியை தன்னுடன் சேர்த்து வைப்பதாக விஜய்யை கூறியிருக்கிறார். இதை மனதில் வைத்து தான் நவீன், காவிரிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று யமுனாவிடம் கூறினார்.

விஜய் இடம் போட்டுக் கொடுக்கப் போகும் யமுனா

ஆனால் இது எதுவும் தெரியாத யமுனா, நவீன் சொன்னதற்கு பின்னாடியில் காவிரி தான் இருக்கிறாள். அந்த வகையில் காவிரி மனதிற்குள் இன்னும் நவீன் தான் இருக்கிறார். பாவம் விஜய் மாமாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டார். இது எதையும் தெளிவுபடுத்த முடியாமல் காவிரி, யமுனாவிடம் பேசி புரிய வைக்க முயற்சி எடுக்கிறார்.

யமுனை எதையும் காது கொடுத்து கேட்காமல் நவீன் இடம் பேசுவதற்காக தொடர்ந்து நவீனுக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் நவீன், யமுனா தான் போன் பண்ணுகிறாள் என்று பார்த்ததும் பேச விருப்பம் இல்லாமல் ஃபோன் அட்டென்ட் பண்ணாமல் விடுகிறார். உடனே யமுனா தில்லாலங்கடி வேலையை பார்க்கும் விதமாக யாருக்கும் தெரியாமல் காவிரி ஃபோனை எடுத்து நவீனுக்கு போன் பண்ணுகிறார்.

உடனே நவீன், காவிரி தான் பேசுவதற்கு கால் பண்ணுகிறார் என்று அட்டென்ட் பண்ணி விடுகிறார். அப்பொழுது காவிரி வந்துவிட்டதால் யமுனா போனை கட் பண்ணி விடுகிறார். இது எதுவும் தெரியாத நவீன் எதார்த்தமாக காவிரிக்கு கால் பண்ணுகிறார். உடனே காவிரி, நவீனை திட்டும் விதமாக நீ ஏன் எனக்கு கால் பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு நவீன் உன்னுடைய நம்பரில் இருந்து தான் இப்பொழுது எனக்கு போன் வந்தது.

அதற்கு தான் நான் திருப்பி கூப்பிட்டேன் என்று சொல்லிய நிலையில் காவேரி, இனி என் ஃபோனில் இருந்து உனக்கு கால் வராது. என்னிடம் பேசவும் முயற்சி பண்ணாதே என்று திட்டி விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த யமுனா, என்னம்மா நடிக்கிற நீ ஓவராக சீன் போடாத என்று அக்காவை தவறாக நினைத்து வழக்கம் போல் காவிரியை திட்டுகிறார்.

இதனால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் காவிரி, பழையபடி விஜய்யிடம் பேச முடியாமல் ஒதுங்கி போகிறார். இதனைத் தொடர்ந்து காவேரி பிறந்த நாளுக்கு ஒரு வீடை பரிசாக கொடுக்க வேண்டும் என்று விஜய் முடிவு பண்ணி தாத்தாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் தாத்தாவும் சந்தோஷத்தில் உனக்கு மனைவி என்றால் அது காவேரி தான். அவள் வந்த பிறகுதான் உன்னுடைய சந்தோசம் எல்லாமே நிலைத்து போய் இருக்கிறது.

அதனால் எந்த காரணத்தைக் கொண்டும் காவிரியை விட்டு விடாதே என்று கூறுகிறார். அப்பொழுது விஜய்யும் காவிரி தான் எனக்கு எல்லாமே என்று மனசுக்குள் ஆசையை வளர்த்துக் கொண்டார். இதனை தொடர்ந்து விஜய் தனியாக இருக்கும் பொழுது நடந்த விஷயத்தை சொல்லலாம் என்று யமுனா, விஜய் இடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.

ஒருவேளை யமுனா நடந்த விஷயத்தை அரைகுறையாக புரிந்ததை வைத்து விஜய் இடம் சொல்லிவிட்டால் அடுத்து விஜய்யும், காவேரியிடம் இருந்து விலக வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தத்தில் காவிரிக்கு எதிரி ராகினி என்பதை விட ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் இல்லாமல் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது யமுனாவாக தான் இருக்கிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -