Connect with us
Cinemapettai

Cinemapettai

கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் செய்ய வேண்டியதை தொடக்கத்திலேயே செய்து பிரமிக்க வைத்த நடராஜன்.. புல்லரிக்க வைத்த சம்பவம்!

yorker-natarajan

Sports | விளையாட்டு

கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் செய்ய வேண்டியதை தொடக்கத்திலேயே செய்து பிரமிக்க வைத்த நடராஜன்.. புல்லரிக்க வைத்த சம்பவம்!

‘யாக்கர் கிங் ஆப் இந்தியா’ என்ற பட்டத்துடன் உலக அளவில் இந்திய கிரிக்கெட்டை நிலைநிறுத்தி காட்டியவர் தான் சின்ன பாப்பம்பட்டியைச் சார்ந்த நட்ராஜ். அதுமட்டுமில்லாமல், பௌவுலிங்கில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பிரட்லி ‘பௌலிங்னா அது இப்படித்தான் இருக்கனும்’ என்று  நடராஜனை புகழ்ந்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் அவர் பீல்டிங், விக்கெட்டுகளை பார்த்து அசந்துபோன ஆஸ்திரேலிய மீடியாக்கள் அனைத்தும் இன்றுவரை நட்டுவின் புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நட்ராஜ், எல்லாரும் தங்களுடைய கேரியர் முடிச்சு செய்யக்கூடிய ஒரு விஷயத்தை  இந்தியன் கிரிக்கெட் டீமில் செலக்ட் ஆவதற்கு முன்பே செய்திருப்பது பலரை வியக்க வைத்துள்ளது.

அதாவது நட்ராஜ் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் தாண்டி பஞ்சாப் அணியில் தேர்ந்தெடுக்கும் முதன்முதலாக ஐபிஎல் சீசனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அப்போது நட்ராஜ் பஞ்சாப் அணியால் 3 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டாராம்.

மேலும் அந்த பணத்தை வைத்து நட்ராஜ் செய்த முதல் வேலை, அவருடைய கிராமத்தில் கிரிக்கெட் கோச்சிங் சென்டர் அமைத்தது தானாம். அதுவும் அந்த கோச்சிங்  சென்டரை சேவையாகவே ஆரம்பித்திருக்கிறார். ஏனென்றால் தன்னைப் போன்று கிரிக்கெட்டை கனவாக கொண்ட எந்த ஒரு நபரும், தன்னைப்போல கஷ்டப்படக்கூடாது என்று நட்ராஜ் நினைத்தாராம்.

இதனால்தான், இலவசமாக கிரிக்கெட் கோச்சிங் சென்டர் ஒன்றை ஆரம்பித்து, அதில் பயிலும் மாணவர்களுக்கு அவரே இலவசமாக பயிற்சி அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்துதான் நட்ராஜ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, இவ்வாறு 40 ஆண்டுகள் கழித்து தங்களுடைய கேரியர் முடிவடையும் வேலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொழிலாக பார்க்கும் கோச்சிங் சென்டரை சேவையாக செய்திருக்கும் நட்ராஜ் பற்றிய இந்த தகவல்கள் பலரை சிலிர்ப்பூட்ட செய்திருக்கிறது.

natarajan kohli

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top