Connect with us
boomerang-movie

யாரடி நீ மோகினியில் நடித்த சரண்யா மோகனுக்கு இப்படி ஒரு நிலைமையா…!!! போட்டோ உள்ளே..!!

News | செய்திகள்

யாரடி நீ மோகினியில் நடித்த சரண்யா மோகனுக்கு இப்படி ஒரு நிலைமையா…!!! போட்டோ உள்ளே..!!

தனுஷ், நயன்தாரா இருவரும் இதுவரை நடித்த படங்களில் அவர்களுடைய நடிப்பில் தி பெஸ்ட் என்று சொல்லக் கூடிய படங்களில் ஒன்றுதான் யாரடி நீ மோகினி.

தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ஆடவாரி மாடலுக்கு அர்தாலே வேறுலே என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் யாரடி நீ மோகினி யாக வெளிவந்தது.

தனுஷ், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்த இந்தப் படம் ஒரு சராசரி இளைஞனின் அழுகை, காதல், குறும்பு, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது.

YaradiNeeMohini

படம் பார்த்த பல இளைஞர்களும் தங்களை திரையில் தனுஷாகவே பார்த்து ரசித்தனர். நயன்தாராவை இந்த அளவிற்கு இதற்கு முன் யாராவது காட்டியிருப்பார்களா என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் நயன்தாரா மிகவும் அழகாக இருந்தார்.

நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன், நயன்தாராவின் முறைப் பையனாக நடித்த கார்த்திக் குமார், தனுஷ் நண்பனாக நடித்த கருணாஸ், தனுஷ் அப்பாவாக நடித்த ரகுவரன்,நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா, நயன்தாராவின் தாத்தாவாக நடித்த கே.விஸ்வநாத் இப்படி படத்தில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்த படம் இது.

saranya

ரகுவரன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் இதுதான்.யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களுமே இனிமையாக அமைந்தது.பாலக்காட்டுப் பக்கத்திலே…

என்ற ரீமிக்ஸ் பாடலுக்கு மட்டும் டி.இமான் இசையமைத்திருந்தார். மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படம் 2008ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

தமிழில் யாரடி நீ மோகினி படத்தின் மூலம் பிரபலமானவர் சரண்யா மோகன்.

YaradiNeeMohini

இவர் கடந்த 2015ம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்கு பின்னர் சரண்யா மோகன் குண்டானார், சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

நெட்டிசன்கள் பலரும் கலாய்க்க அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு பெண், தாயாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

sayanya-mohan

தாய்மைக்கு பின் பெண்ணின் உடலில் மாற்றங்கள் ஏற்படும், எப்படி நான் இருக்கிறேனோ அதனை ஏற்றுக் கொள்ளும் உண்மையான மனிதர் கிடைத்தது மகிழ்ச்சி என பதிவிட்டிருந்தார் நடிகை சரண்யா மோகன்.

இந்நிலையில், இவர் ஒரு ஸ்டேஷனரி ஷாப்பில் வேலை பார்த்து வருவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. மேலும், ஒரு ஸ்டேஷனரி ஷாப்பில் நடிகை சரண்யா மோகன் வேலை செய்வது போன்ற ஒரு புடைப்படமும் வெளியாகியுள்ளது. சரண்யா மோகனுக்கு இப்படியொரு நிலைமையா? என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top