Tamil Cinema News | சினிமா செய்திகள்
யானை பலத்துடன் வெளிவந்த ஹரியின் அடுத்த பட ட்ரெய்லர்.. கிராமத்தானாக மிரட்டும் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி கடைசியாக சாமி 2 திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அவர் அருண் விஜய்யை வைத்து யானை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
சிலபல தடங்கல்களால் வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
பொதுவாக ஹரியின் திரைப்படம் என்றாலே ஏராளமான நடிகர்கள் மற்றும் குடும்பப் பின்னணி கலந்து இருக்கும். தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரும் அந்த வரிசையில் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது.
அதிலும் அருண்விஜய் பக்கா கிராமத்து ஆளாக படு மிரட்டலாக நடித்துள்ளார். வழக்கமாக காமெடி காட்சிகளில் கலக்கும் யோகிபாபுவுக்கு இந்த திரைப்படத்தில் ஒரு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் மட்டுமல்லாமல் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் வகையில் ட்ரைலர் அட்டகாசமாக வெளிவந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அருண் விஜய்யின் ஆக்ரோஷமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐயா, தாமிரபரணி போன்ற திரைப்படங்களின் வரிசையில் இந்த படமும் ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
