நடிகர் விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு நடிக்கிறார். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் இதில் வில்லனுக்கு பெரிதாக வேலையில்லையாம். வெறுமனே ஹீரோவிடம் தோற்கும் ஒரு சாதாரணமான கமர்ஷியல் வில்லன் வேடமாம். அதனால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.