Technology | தொழில்நுட்பம்
48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..!

சியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் மட்டும் அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்கி பயன் பெறும் வகையில் சியோமி ரெட்மி போன்களின் விலை குறைவாக இருக்கும்.
இந்த போன்களில் மிக சிறப்பான அம்சம் என்னவென்றால் மிகக் குறைந்த விலையில் அதிகமான செயல்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இந்தநிலையில் ஜியோமி ரெட்மி போன்கள் 48MB கேமரா வசதியுடன் வெளிவர உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இரண்டு மாடல்களாக வெளிவர உள்ளது ஜியோமி ரெட்மி நோட், ஜியோமி ரெட்மி நோட் ப்ரோ. இந்த வருடத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் ஜியோமியின் போன்கள் ஆகும்.
