மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அனிருத் இல்லையாம்.. கமலின் செல்லப் பிள்ளைதான் இசை!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் பேக்டரி நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளது.

இந்த படத்தில் நாயகனாக பிரபல கதாநாயகன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி என்பவர் நடிக்க உள்ளார். இவர்தான் சமீபத்தில் பிரிட்டோவின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய மருமகனை எப்படியாவது மிகப் பெரிய ஹீரோவாக்கி விட வேண்டும் என பல கோடி செலவு செய்து பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் சேவியர் பிரிட்டோ.

இந்த படத்தை அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார். இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கமலின் செல்லப்பிள்ளை இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜிப்ரான் கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிப்ரானின் பின்னணி இசை அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருவதால் இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் பின்னணி இசைக்கு பெரிய வேலை இருக்கிறதாம்.

gibran-music-director
gibran-music-director
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்