ஆமாங்க நீங்க படித்த தலைப்பு சரி தான். 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற WWE ஜான் சேனா, நேற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

ஜான் சேனா

ஜான் சேனா குரல் கொடுத்து நடித்துள்ள ஹாலிவுட் அனிமேஷன் படம் பெர்டினாண்ட் (Ferdinanad ). இந்த படத்தினை ப்ரோமோட் செய்யும் விதமாகவே அவர் ஆஸ்திரேலியா சென்றார். இவர் சிட்னியில் பல இடங்களுக்கு சென்றார். அங்குள்ள ஸ்கூல் ஒன்றிற்கு சென்று குழந்தைகளுக்கு பெர்டினாண்ட் கதை  கூட படித்து காட்டினார்.

ஆஸ்திரேலியாவின் டி 20 போட்டியான   பிக் பாஷ் லீக் வரும் டிசம்பர் 9  ஆரம்பம் ஆகிறது. அதில் சிட்னி தண்டர்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த அணியின் கேப்டன் ஷனே வாட்சன்.

அதிகம் படித்தவை:  ராதிகா ஆப்தே நடித்திருக்கும் Lust Stories படத்தின் ட்ரைலர்.!

இவருடன் தான் ஜான் சேனா கிரிக்கெட் விளையாடினர்.  அப்பொழுது வாட்சன் சில பேட்டிங் டிப்ஸ் வேறு வழங்கினார்.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.

ஷனே வாட்சன் தன் ட்விட்டரில், “சாம்பியன் ஜான் சீனாவிற்கு மிக சிறந்த பேட் தான் கொடுக்க வேண்டும்.” என்று புகைப்படத்துடன் ட்வீட் போட்டார்.

மேலும் ஜான் சேனா நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து கிளமபி துபாய் சென்றார்.

ஜான் சேனா இதற்கு முன்னரே மரைன், தி வால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்

எனினும் குழந்தைகளை மைய்யமாக கொண்டு நடிக்கும் முதல் படம் இது. உலகமெங்கும் வரும் டிசம்பர் 15  ரிலீஸ் ஆகிறது.