ஸ்கைப், கூகுள் மீட்டை பின்னுக்கு தள்ளும் வாட்ஸ்அப்.. ட்ரெண்டாகும் புதிய அப்டேட்!

உலகளவில் பிரபலமான வாட்ஸ்-அப் செயலியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது ஸ்கைப் கால், கூகுள் மீட் போன்ற அப்ளிகேஷன்களின் மூலம் எளிதாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் கால் செய்ய முடியும்.

ஆனால் வாட்ஸ்-அப்பில் இருந்து கம்ப்யூட்டரில் மெசேஜ் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம். இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் மற்றவருக்கு அழைத்துப் பேசுவது மற்றும் வீடியோ அழைப்பு செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் குரூப் கால் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி தற்போது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

wtsapp-friends

இதன் மூலம் மொபைல் போனை சில நேரங்களுக்கு ஓரம்கட்டி கூட வைத்துவிடலாம். ஏனென்றால் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் அதிக நேரம் பேசுவதன் மூலம் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய அறிவிப்பை வாட்ஸ்அப்பில் நேரடியாக கம்ப்யூட்டரில் லாகின் செய்து பயன் பெறலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்