திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் பாலகுமாரன். பாலகுமாரனின் எழுத்துக்கள் கவராத தமிழர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்.

இந்நிலையில் இன்று காலை ரஜினியின் வீட்டிற்கு தனது மனைவியுடன் பாலகுமாரன் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது என்றும், இந்த சந்திப்பின்போது பாலகுமாரன் தான் எழுதிய சில நூல்களை ரஜினிக்கு அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  இளையதளபதி விஜய்யே இவருடைய தீவிர ரசிகராம் - தாணு தகவல்

இந்த தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினி காந்தோடு பேசி களித்தேன். உடன் சாந்தாவும் பாகியும் டிரைவர் சபேஷும்’ என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினி-கமல் பாணியில் அசத்தும் விஜய்சேதுபதி!

ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்திற்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பதை சொல்ல தேவையில்லை.