அடேங்கப்பா இந்த பாட்டு எல்லாம் தனுஷ் தான் எழுதுனாரா.. அதிக ஹிட்டான 5 பாடல்கள்

பொதுவாகவே எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் சினிமாவை பொருத்தவரை ஹீரோவாக இருப்பவர்கள் படங்களில் நடிப்பது அத்துடன் சில பாடல்களை பாடியும் இருப்பார்கள். ஆனால் தனுஷ் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல்களை பாடியவர் ஆகவும், அத்துடன் அந்த பாடலுக்கு வரிகள் எழுதக்கூடியவராகவும் பல திறமைகளை வைத்திருக்கிறார். இவர் நிறைய பாடல்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். ஆனால் அதில் மிகவும் பிரமிக்க வைத்த பாடல்களை பற்றி பார்க்கலாம்.

எதிர்நீச்சல்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு எதிர்நீச்சல் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் வரும் “நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே” இந்தப் பாடல் வரிகளை தனுஷ் தான் எழுதி இருக்கிறார். அத்துடன் இப்பாடலை தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

Also read: சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்

மயக்கம் என்ன: செல்வராகவன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ன திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ரிச்சா, சுந்தர் ராமு மற்றும் மதிவாணன் ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் தனுஷ் எழுதிய ஒரு பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி நிறைய பேர் அவர்களுடைய மனைவிக்காக டெடிகேட் பண்ற மாதிரி அமைந்தது. அந்த பாடல் வரிகள் “உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி”.

பவர் பாண்டி: தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் ராஜ்கிரன், ரேவதி, மடோனா செபஸ்டின், பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதிய பாடல் வரிகள் மிகவும் அருமையாக அமைந்திருக்கும். அந்தப் பாடல் “வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன”.

Also read: சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

வேலையில்லா பட்டதாரி: இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பல பாராட்டுகளை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியை கொடுத்தது. இதில் தனுஷ் அம்மா சென்டிமென்ட் காக ஒரு பாடலை எழுதி அந்த பாடல் எல்லாருடைய மனதிலும் ஆழமாக பதிந்தது. அந்த பாடலை இவரே பாடவும் செய்திருப்பார். அந்த பாடல் வரிகள் “அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா… தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன”.

3 : ஐஸ்வர்யா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு 3 திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், சுருதிஹாசன், சிவகார்த்திகேயன், பிரபு மற்றும் பானுப்பிரியா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் தனுஷ் எழுதிய பாடல் “இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா போ நீ போ போ நீ போ”. இந்த பாடல் ஆல் டைம் பேவரைட் சாங் ஆக எல்லோருடைய மனதிலும் பதிந்து விட்டது.

Also read: தனுஷுடன் இணையும் வடிவேலு.. சுயரூபம் தெரியாமல் சிக்கிய இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்