புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

55 ஆண்டுகளில் மோசமான தோல்வி.. முடிவுக்கு வரும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி? ரசிகர்கள் வேதனை

55 ஆண்டுகளில் எந்த இந்திய கேப்டனும் பண்ணாத மோசமான சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா படைத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட பல திறமையான மூத்த வீரர்களும், பும்ரா, ரிஷப் பாண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்ட இளம் வீரர்களைக் கொண்டிருப்பதாலும் எந்த அணியையும் எதிர்கொண்டு ஜெயித்து வந்தது. ஆனால், சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்றது.

இது பிசிசிஐக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குமே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வி என்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக செல்வதற்கான வாய்ப்பில் எதிரொலிக்கும் என்பதால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2 வது இடம் பிடித்திருந்தாலும், அடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் தொடரில் 4 போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டைகர் பட்டோடியின் கேப்டன்சியில் படுதோல்வி

இந்த நிலையில் கிரிக்கெட்டில் இந்திய அணி வந்த பாதையில், கடந்த 1969 ஆம் ஆண்டு டைகர் பட்டோடியின் கேப்டன்சியில் இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த 4 டெஸ்ட் போட்டியில் தோற்றது. அப்போது, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 1 போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் தோற்றிருந்தது.

இந்த மோசமான தோல்வியில் இருந்து பாடம் கற்ற இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டு வரை ஜாம்பாவானாக இருந்து வந்தது. அதாவது ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதில்லை.

55 ஆண்டுகளில் மோசமான தோல்வி

இந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமயிலான கேப்டன்சியில் இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் தோற்றது. மேலும், இவ்வாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு தலைமை வகிப்பது என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அதற்கு பல ஆண்டுகள் பொறுமை, திறமை, தலைமைப்பண்பு இருந்ததால்தான் அணியை வழி நடத்த முடியும். அந்த தகுதி ரோஹிதி சர்மாவிடம் இருக்கிறது. அதனால்தான் அவர் டி20 உலகக் கோப்பையை தோனிக்குப் பிறகு பெற்றுக் கொடுத்தார். ஆனால் டெஸ்ட் தொடரில் தோல்வி என்பது அவரது கணிப்பு, மைதானம் அவர்களுக்கு சாதகமில்லாத சூழல் அமைந்ததும் கூட எதிர்பார்த்த விளைவுகள் முடிவுகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் ரோஹித்துக்கு ஆதரவாக கருத்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News