நெகட்டிவ் விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய காத்துவாக்குல 2 காதல்.. இத்தனை கோடி வசூலா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித்குமார் மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் வசூலை பொருத்தவரை நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபகாலமாக ஆக்சன் படங்களை அதிகமாக வெளியாகிறது.

இதனால் மீண்டும் ஒரு காதல் படத்துக்காக ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு காத்துவாக்குல 2 காதல் படம் ஒரு ட்ரீட்டாக அமைந்தது. இப்படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் முதல் இரண்டு நாட்களில் 11 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து நான்காவது நாட்களில் 34 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்த நிலையில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்துள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற அந்தஸ்தை காத்துவாக்குல 2 காதல் படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியிருந்தார். இதனால் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் மன்னனாக இருப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதியை வசூல் மன்னன் என்று சொன்னால் நம்புற மாதிரி இருக்கா என சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

Next Story

- Advertisement -