இருமுகன் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகிவிட்டது. ஏனெனில் விக்ரம் நீண்ட வருடங்களாக ஒரு மாஸ் ஹிட்டிற்காக காத்திருந்தார்.

சமீபத்தில் வந்த இருமுகன் தற்போது அந்த குறையை போக்கியுள்ளது, இப்படம் வெளிவந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா தெலுங்கானாவில் ரூ 13.5 கோடி, கேரளாவில் ரூ 3.5 கோடி முறையே வசூல் செய்துள்ளது, வெளிநாடுகளில் ரூ 13 கோடி என மொத்தம் ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.