Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் – ஒரு வாரத்தில் மட்டும் இவ்வளவு கோடி வசூல் வேட்டையா.? லைக்கா வெளியீடு
பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே தர்பார் படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பெரும் திருப்புமுனை என்றே கூறலாம். இளையதளபதி விஜய்யை வைத்து கத்தி, சர்க்கார், துப்பாக்கி போன்ற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பார் படத்தின் நான்கு நாட்கள் உலக அளவில் பெற்ற வசூலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 கோடி வசூல் செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்தப் படம் உலக அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று வரை 80 லட்ச ரூபாய் வசூல் செய்து மொத்தமாக 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். ஒரே வாரத்தில் மட்டும் 200 கோடி வசூலைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நம்பி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை எடுத்துக் கொடுப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இந்த தர்பார் படத்தின் மொத்த வசூல் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
Here's the Worldwide Box-office collections of #DARBAR
"Anyone can play the game, but the throne always belongs to the EMPEROR 👑"@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarPongal #DarbarBlockbuster pic.twitter.com/f2z0MGlzVv
— Lyca Productions (@LycaProductions) January 13, 2020
