Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம்.! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் ஆவார், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டங்களை யாராலும் கணக்கிட முடியாது, தளபதி விஜய்க்கு கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

mersal
பல சர்ச்சைகளைக் கடந்து வந்த இந்த படம் பல விருதுகளை வாங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே, மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது மெர்சல், இந்த நிலையில் லண்டனை சேர்ந்த IARA அமைப்பின் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் யார் என்ற பட்டியலை வெளியிட்டார்கள் அந்தப் பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் தேர்வாகினார்.
தற்போது இதன் இறுதி ரிசல்ட் வெளியாகியுள்ளது 2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்த விஷயத்தை அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் மேலும் ட்விட்டரில் பலரை டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
