பொதுவாக ஒன்று, இரண்டு உலகப் போர்களின் நாச வேலைகள் உயிர் சேதம். கட்டட இடிபாடுகள் என அத்தனையையும் பதிவு செய்ய செய்தி நிறுவனங்கள் கேமரா மேன்கள் தேவை என்கிற டென்டர் அறிவிக்கும்.

இரண்டாம் உலகப் போரை படம் எடுக்க இப்படி அறிவிப்பு வெளியான போது 568 கேமராமேன்கள் உலகம் முழுவதும் விண்ணபித்தார்கள்.

அதில் தேர்ந்தவர்கள் 210 பேர் படம்பிடிக்கும் போதே சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். குண்டு வெடித்து உடல் சிதறினார்கள்.

உயிரோடு நாடு திரும்பியவர்கள் ஏழு பேர் மட்டுமே. அவர்களும் கை கால்களை இழந்தவர்கள்.

அமெரிக்க, ஈராக் போரில் ஒளிப்பதிவாளர்கள் பணயக் கைதியாக சிக்கி கழுத்து அறுபட்டு செத்துப் போனார்கள்.

ஆப்கன் போரிலும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நிறைய பேர்  பரிதாபமாக செத்தார்கள்.

இதோ தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த போரில் அணுகுண்டுகள் சர்வ சாதாரணமாக வெடிக்கும். மனித இனமே மிஞ்சுமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் மொத்தம் 134 ஒளிப்பதிவாளர்கள் உயிரைப் பணயம் வைத்து ரெடி என்று பயோடேட்டா அனுப்பிவிட்டார்கள்.

சம்பளம் பல கோடிகள்.  ஆனால் உயிரோடு திரும்புவார்களா என்பதே கேள்விக்குறிதான். இந்த குழுவில் இந்தியா சார்பில் 26 கேமரா மேன்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

அதில் ஒருவர் தமிழக சினிமா கேமரா மேன். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமரோடு பயணித்து அனைத்தையும் படம் பிடித்தவர் முருகப் பெருமான் பெயர் கொண்டவர். துணிச்சல் மிக்கவர்.

தானே புயலில் மரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு உயிரை துச்சமாக எண்ணி படம் பிடித்தவர். மாருதா புயலையும் இவர் தான்    படம் எடுத்தார்.

இதோ மூன்றாம் உலகப் போரில் களத்தில் இறங்கி படம் பிடிக்க ஆயத்தமாகி விட்டார். குடும்பம்..? பிள்ளைகள்..? வாழ்க்கை.?

லட்சியவாதிகளுக்கு சாதனை மட்டுமே குடும்பம்….வாழ்த்துகள்..