வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? வெளியான தகவல்

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ள இந்திய அணி சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோட்டை விட்டு, சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவியது. ரோஹித் சர்மா சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் இந்தியா அணி நுழையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைய எந்த அணிகளுக்குத் தகுதி இருக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் டி20, ஒரு நாள் தொடருக்கான உலகக் கோப்பை போன்றே டெஸ்ட் தொடரின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக ஐசிசி அமைஇப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது. இது, குறிப்பிட்ட காலத்தில், சர்வதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிகளில் வெற்றி பெறுதல், தோல்வி அடைதல், டிரா உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டுகின்றன.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஃபைனல்

இதன் மூலம் டெஸ்ட் தொடர் விளையாட்டிலும் அணிகளும், வீரர்களும் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் விளையாடுவர், ரசிகர்களுக்கும் பார்க்க உற்சாகமாக இருக்கிறது. அதன்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நடக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்த முதல் சீசனுக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

அதன்பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு 2வது சீசனுக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்து நாட்டின் ஓவன் மைதானத்தில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2 வது சீசன்( 2024 -2025) நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

அணிகளின் புள்ளிப் பட்டியல்

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த சீசனின் கடைசிப் போட்டி, லண்டனின் உள்ள லார்ட்ஸ் கிரவுண்டில் அடுத்தாண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. அதன்படி எந்த அணிகள் இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்றால், இந்தியாவுக்கு 68.82 சதவீதம் வாய்ப்புள்ளது.

இன்னும் 6 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதில், நியூசிலாந்துக்கு எதிராக 1 போட்டியிலும், ஆஸ்., எதிராக 5 போட்டியிலும் விளையாட உள்ளாது.

இதையடுத்து ஆஸ்.,க்கு 62.50 சதவீதம் வாய்ப்புள்ளது. இன்னும் 7 போட்டிகளில் பங்கேற்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. அதேபோல் இலங்கைக்கு 55.56 சதவீத வாய்ப்பும், நியூசிலாந்துக்கு 50 சதவீத வாய்ப்பும், தென்னாப்பிரிக்காவுக்கு 47.62 சதவீத வாய்ப்பும், இங்கிலாந்துக்கு 40.79 சதவீத வாய்ப்பும், பாகிஸ்தானுக்கு3333 சதவீதம் வாய்ப்பும் உள்ளன.

எனவே இந்தியா இன்னும் நடக்கவுள்ள 6 போட்டிகளிலும் கவனமுடன் விளையாடினால் எப்படியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துகள் கூறி வருகின்றன.

- Advertisement -

Trending News