Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக சாதனையை படைத்து இருக்கும் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரித்து வரும் கனா படம் உலக சாதனையை படைத்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே அறிமுகமான, எல்லாருக்கும் பிடித்த நபர் என்பதால் மக்கள் மனதில் எளிதாக தொற்றிக்கொண்டார் மனிதர். இவரை பிடிக்காதவர்கள் இல்லை என்றுக்கூட சொல்லலாம். தொடர்ந்து அவரிடம் வந்த எல்லா வாய்ப்புகளையும் தீர ஆராய்ந்து ஓகே சொல்லினார். அதில் எல்லா படமுமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால், தமிழ் சினிமாவில் அடுத்தக்கட்ட இளம் நாயகர்களில் முன்னிலையில் இருக்கிறார் சிவா. அவ்வப்போது கோலிவுட்டில் சில பாடல்களையும் பாடி இருக்கிறார். நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை தன் நண்பர் அனிருத்திற்காக எழுதி கொடுத்து இருக்கிறார். பாடலும் ஏகபோகத்திற்கு ஹிட் கொடுத்து இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு நண்பர்கள் என்றால் கொள்ளை பிரியம். தன் பால்ய நண்பர்களை கூட இன்று மறவாதவர். இந்நிலையில், தன் நீண்ட கால நண்பர் அருண்ராஜ் காமராஜ் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கனா படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரராக பெண் சந்திக்கும் சவால்களை எப்படி சமாளிக்கிறாள். அவள் லட்சியத்தில் வென்றாளா என்பதையே இப்படத்தை கதை பின்னணியாக காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அதற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார். தொடர்ந்து, சத்யராஜும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் முதல் படம் என்ற அந்தஸ்த்தை மட்டுமல்லாமல் சாதனையை படைத்து இருக்கிறது. இதற்கு முன்னர் இந்த ஜானரில் படம் எந்த மொழியிலும் எடுக்கப்படவில்லை. இப்படத்தின் இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் நெருப்புடா என்ற மாஸ் ஹிட் பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
