fbpx
Connect with us

அடுத்து உலக சாதனைக்கு குறி வைக்கும் மெர்சல்..!!

News | செய்திகள்

அடுத்து உலக சாதனைக்கு குறி வைக்கும் மெர்சல்..!!

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர். மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது.

மெர்சல் டீசர் வெளிவந்த 60 நிமிடத்தில் 4 லட்சம் லைக்ஸ் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. 75k டிஸ் லைக்ஸ் பெற்றுள்ளது , 24 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்ஸுகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.மேலும் அது  உலக சாதனையை  முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top