Connect with us
Cinemapettai

Cinemapettai

ISRO சிவனின் அடுத்த இலக்கு.! பல தடைகளை உடைத்து விண்ணில் பறந்த சந்திரயான்-2வின் சிறப்பு அம்சங்கள்.!

isro-rocket

India | இந்தியா

ISRO சிவனின் அடுத்த இலக்கு.! பல தடைகளை உடைத்து விண்ணில் பறந்த சந்திரயான்-2வின் சிறப்பு அம்சங்கள்.!

சந்திரயான்-2 நேற்று விஞ்ஞானிகளால் ஏவப்பட்டுள்ளது, இது ISROவின் மிகப்பெரிய உலக சாதனை என்றே கூறலாம். இந்த வின்கலம் சதீஷ் தவான் என்ற ரிசர்ச் சென்டரில் இருந்து  விண்ணில் ஏவப்படும் போது மக்கள் கூட்டம் அலைமோதியது இதனை பார்ப்பதற்காக.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக  இருந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் முக்கியமாக தமிழ்நாட்டை  சேர்ந்த ISRO தலைவராக உள்ள சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது. இவரும் ஒரு அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 வின் சிறப்பு அம்சங்கள் என்ன வென்றால்,

  1. உலகிலேயே முதன்முறையாக நிலாவின் தென் துருவத்தில் கால் பதிக்கிறது இந்தியா.
  2. நிலாவில் இந்தியாவின் இரண்டாவது ஆளில்லா விண்வெளி ஆராய்ச்சி இதுவே.
  3. சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த ரூ.978 கோடி இந்தியா செலவிட்டுள்ளது.
  4. நிலாவில் சாஃப்ட் லேண்டிங் தரையிறக்கும் 4வது நாடாக  இந்தியா இடம் பிடித்துள்ளது.
  5. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலம் மிகச் சிறந்த தொழில்நுட்ப இதுவின் முக்கிய அம்சங்களாகும்.
  6. நிலாவின் கனிம வளம், நீர் இருப்பு பற்றி சந்திரயான்-2 ஆராய இருக்கிறது.
  7. இந்த சோதனையில் வெற்றி கண்டால் நிலாவில் முதல் முதலாக நீர்  எடுத்தது இந்தியர்கள்தான் என்று சரித்திரம் படைக்கும்.

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டம் உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top