India | இந்தியா
அமெரிக்காவின் மோடி டிரம்புக்கு ஆப்படித்த நீதிமன்றம்.. இதெல்லாம் தேவையா பாஸ்
மோடி எப்படி இந்தியாவை ஒன்றுமில்லாமல் மாற்றப் போகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறாரோ, அதேபோல் அமெரிக்காவில் டிரம்ப் என்பவர் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
தேவையில்லாமல் உள்நாட்டுப் போர், வெளிநாட்டு போர் என மற்ற நாடுகளை வம்புக்கிழுத்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் எங்கே சென்று முடியப் போகிறதோ என அமெரிக்கர்கள் தினமும் கத்தி மேல் நடந்து வருகின்றனர்.
சீக்கிரமே இவரை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு அடித்தது ஒரு ஜாக்பாட். அமெரிக்க நீதிமன்றம் டிரம்புக்கு சுமார் 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அது என்னவென்றால், டொனால்ட் ஜே ட்ரம்ப் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நிறுவி வந்த டிரம்ப், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் அறக்கட்டளை சார்பான பணத்தை செலவழித்து விட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது ட்ரம்ப் அவர்களுக்கு தண்டனை தரும் விதமாக ரூ. 14 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். நீங்க இந்த வேலை வேற செய்திருக்கிறீர்களா என கடுப்புடன் அமெரிக்கர்கள் அடுத்த தேர்தலுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
