India | இந்தியா
தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு.. பெரும் வளர்ச்சி ஏற்படுமா?
2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில்
2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்கள் முதலீடு விவரத்தை அறிந்து கொள்ளலாம். ரூபாய் 3.44 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் நாளன்று ரூபாய் ஆயிரத்து 300 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
வர்த்தக வாகன உற்பத்தி திறன் 2,18,000 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட்டு 1,08,525 மற்றும் ஏற்றுமதி 22,815 எண்ணிக்கைகள் ஆகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ள மோட்டார் நிறுவனங்கள்:
1. ஹூண்டாய் மோட்டார்
2. பிஎஸ்சி நிறுவனம்
3. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ( ரூபாய்.1500 கோடி முதலீடு)
4. எம்ஆர்எப் நிறுவனம் ( ரூபாய்.1300 கோடி முதலீடு)
மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் சுமார் 12,000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 39,500 கோடி ஆகும் இவற்றில் சில மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆக உள்ளன.
