India | இந்தியா
முதன் முறையாக விண்வெளியில் நேரடியாகப் படமாகும் பிரபல நடிகரின் படம்.. அங்கயும் விட்டுவைக்கலையா?
பிரபல ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் நடிப்பில் முதல் முறையாக விண்வெளியில் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை சம்மந்தபட்டவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹாலிவுட் சினிமாவின் வசூல் நாயகனாக இருப்பவர் டாம் குரூஸ். மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களின் மூலம் இந்தியாவிலும் பிரபலமான இவரின் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதுமட்டுமில்லாமல் டூப் போடாமல் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் மிகவும் ஆர்வமிக்க நடிகராக காணப்படுகிறார். இந்த வகையில் ஆபத்தின் உச்ச கட்டமாக விண்வெளிக்கு சென்று நேரடியாக படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டாம் குரூஸ்(tom cruise).
இதுவரை விண்வெளி சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்துமே கிராபிக்ஸ் பணிகளில் மூலம் தான் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவியால் நேரடியாக விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று படமெடுக்க உள்ளனர்.
இதனை நாசாவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

nasa-tweet-tom-cruse-movie
