fbpx
Connect with us

Cinemapettai

பயிற்சி ஆட்டத்தின் போது பலத்த காயம்..! உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..?

Sports | விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தின் போது பலத்த காயம்..! உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..?


உலக கோப்பை இன்னும் ஆறு தினங்களில் தொடங்க இருப்பதால் இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த உலக கோப்பை, வரும்  30 ஆம் தேதியிலிருந்து ஜூலை 14-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் உலக அளவில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

தற்போதைய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் போன்ற முன்னணி அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கவிருக்கும் இந்தப்  போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் காயம் அடைவது சகஜம்தான்.

ஆனால் தற்போது  விஜய் சங்கர் பலத்த காயத்துடன் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். அவர் உலக கோப்பையில் ஆடுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இன்னும் சில தினங்களில் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வார் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ் காயமடைந்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top