Sports | விளையாட்டு
ஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..! உலக கோப்பையில் களமிறங்குவார்களா?
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களைத் தவறாகப் பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால் அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை பிசிசிஐ இன்னும் விசாரணை தொடங்காத நிலையில் அவர்கள் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தவறுகள் செய்திருந்தாலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர் ஆகையால் அவர்களை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐயின் பொறுப்பு தலைவரான சி.கே.கண்ணா ஆதரவாக பேசி உள்ளார்.
இதனைப் பற்றி கருத்துக் கூறிய முன்னாள் பேட்ஸ்மேன் கங்குலி பொதுவாக வீரர்கள் தவறு செய்வது இயல்பு தான் நாம் மனிதர்கள் தான் மிஷின் இல்லை என்றும் கூறியுள்ளார். அந்தத் தவறை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் இன்னும் சிறந்த மனிதர்களாக வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் வருவதற்கு முன்னரே இந்திய அணிக்குள் வந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்க்கும் போது அனைத்து வீரர்களும் இவர்களின் விளையாட்டு திறமையின் மேல் உள்ள நம்பிக்கையில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
