Sports | விளையாட்டு
2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.! தினேஷ் கார்த்திக் அஸ்வின் யார் உள்ளே
world cup 2019 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக கோப்பை விரைவில் தொடங்க இருக்கிறது இந்தநிலையில் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராத் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வருகின்ற மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூன் 14 வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன இதில் மொத்தம் 45 லீக் போட்டியிலும் மூன்று நாக் அவுட் போட்டிகளும் மொத்தத்தில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அதேபோல் 12 நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார்கள் மேலும் போட்டிகளில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. மேலும் கோலி தலைமையிலான இந்திய அணி விவரம் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி – கேப்டன், ரோகித் சர்மா- துணைக்கேப்டன், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி – விக்கெட் கீப்பர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

world cup 2019
