ஐஸ்வர்யா ராய் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்.. உளறி கொட்டிய நடிகரின் தந்தை

பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா திரையுலகையே ஒரு கலக்கு கலக்கிய முன்னணி நடிகை தான் ஐஸ்வர்யா ராய்.

இவர் தற்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட்டார். இந்த சூழலில் இவருடைய முன்னாள் காதல் அம்பலமாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் பாலிவுட் பிரபல நடிகரான சல்மான் கானும், சர்ச்சைக்குரிய தொடர்பில் இருந்ததாகவும் அதன்பின் அவர்கள் பிரிந்துவிட்டதாக சல்மான் கானின் தந்தை சலீம் கான் ஒரு பேட்டியின் மூலம் திடிக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அதில் “ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான்கான் காதலித்தது உண்மைதான். அதன்பின்அவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்” என்று சலீம்கான் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராய் உடன் தொடர்பில் இருந்த போது சல்மான்கான் வேறு இருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவரவே ஐஸ்வர்யாராய் சல்மான்கானை விட்டு பிரிந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

aishwarya-rai
aishwarya-rai

இப்படி பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சல்மான் கானை விட்டு பிரிந்துவிடலாம் என்று ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.

இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.