fbpx
Connect with us

ஜாலியா வொர்க் ஃப்ரம் ஹோமா? சைலண்ட்டா ஆப்பு வச்ச கூகுள்! ஓசில இனி மங்களம் பட முடியாது

India | இந்தியா

ஜாலியா வொர்க் ஃப்ரம் ஹோமா? சைலண்ட்டா ஆப்பு வச்ச கூகுள்! ஓசில இனி மங்களம் பட முடியாது

இணையத் தேடுபொறி தொழிநுட்பம், மேகக் கணிமை ஆகியவற்றில் முன்னணியாக இருப்பது கூகுள் நிறுவனமே. தற்போது இந்த நிறுவனம் யாரும் எதிர்பார்த்திராத ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.

இந்த லாக் டவுன் சமயத்தில் அனைத்து தொழில்நுட்பதவர்களுக்கும், வொர்க் பிரம் ஹோம் செய்தவர்களுக்கும் உபயோகமாய் இருப்பது கூகுள் மீட் வீடியோ காலிங் சேவை தான்.

தற்போது கூகுள் மீட்டிங் தளத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இலவச பயனர்களுக்கான மீட்டிங் கால அவகாசம் 60 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மீட் எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கௌன்ட் வைத்திருப்போர் அனைவருக்கும் இலவச மீட்டிங் காலம் அதிகபட்சமாக 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘ஜி சூட்’ மற்றும் ‘ஜி சூட் பார்’ எஜுகேஷன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மீட்டிங் நேரத்தின்போது அதிகபட்சமாக 250 பெயர் வரை கலந்து கொள்ளும் வசதியை கூகுள் வழங்கியுள்ளது. 

google-meet

google-meet

ஒரு லட்சம் பேருடன் நேரலையில் மீட்டிங் செய்யும் வசதியும், வீடியோ ரெக்கார்டு செய்து கூகுள் ட்ரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதியும் கூகுள் நிறுவனம், ‘ஜி சூட்’ மற்றும் ‘ஜி சூட் பார்’ போன்ற  இரு நிறுவனங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கியுள்ளது.

இதற்காக மாத கட்டணமாக ஒவ்வொரு பயனாளரிடமும் சுமார் 25 டாலர் வசூலிக்கப்பட உள்ளது, மற்றும் இதன் இந்திய மதிப்பு  ரூ 1800 ஆகும். 

இதுபோன்ற ஒரு அதிரடியான அறிவிப்பை கூகுள் பயனாளிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த அறிவிப்பால் ஐடி டுட்ஸ் பயங்கர ஷாக்கில் உள்ளனர்.

Continue Reading
To Top