fbpx
Connect with us

Cinemapettai

இந்த மாதிரி படங்களை பார்க்கவும் மாட்டேன்; நடிக்கவும் மாட்டேன் – அரவிந்த் சாமி

aravind swamy

News | செய்திகள்

இந்த மாதிரி படங்களை பார்க்கவும் மாட்டேன்; நடிக்கவும் மாட்டேன் – அரவிந்த் சாமி

நடிகர் அரவிந்த் சாமி இந்த ஜானர் படங்களில் தனக்கு நடிக்கவும் பிடிக்காது, பார்க்கவும் பிடிக்காது எனக் கூறி இருப்பது கோலிவுட்டினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகிய படம் பாஸ்கர் தி ராஸ்கல். மம்முட்டி, நயன்தாரா லீட் ரோலில் நடித்திருந்தனர். மாஸ் ஹிட் அடித்த இப்படத்தின் தமிழ் ரீமேக் அதிகாரப்பூர்வமாக உருவாகி இருக்கிறது. இயக்குனர் சித்திக்கே இப்படத்தை தமிழிலும் இயக்கி இருக்கிறார். அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ளனர். தெறி படத்தில் கலக்கிய நைனிகா இப்படத்திலும் களமிறங்கி இருக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். பல நாட்களாக தள்ளிப்போன இப்படம் வரும் மே 11ந் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரெய்லரே படத்திற்கான அதிகபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய அரவிந்த் சாமி, மலையாளத்தில் வெளியாகிய பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு சில மாற்றங்களுடன் உருவாக்கி இருக்கிறோம். முழுக்க முழுக்க குடும்பமாக பார்க்கும் படமாகவே அமைந்து இருக்கிறது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீ- எண்ட்ரி கொடுத்தேன். அதை தொடர்ந்து, எனக்கு வந்த 15 படங்களும் வில்லன் கதாபாத்திரமாகவே வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை. படத்தில் எனக்கு நாயகன் ரோலா, வில்லன் ரோலா என்பதெல்லாம் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

அதுபோல, பேய் படங்களில் நடிக்கவே மாட்டேன். ஏன் அதை பார்க்க கூட மாட்டேன். முதலில் நல்ல மனிதர்களை பார்ப்போம். பிறகு, இவ்வுலகில் பேய் இருக்கிறதா என தேடிக்கொள்ளலாம்.

அரசியல் ஆர்வம் எனக்கு இல்லை. எனக்கு அரசியல் பற்றி தெரியாது. ஆனால் மக்கள் பிரச்சினை என்றால் குரல் கொடுக்காமல் இருக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top