jayam-ravi-suriya

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில்
இணைந்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைதொடர்ந்து படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அன்று சூர்யாவின் S3 படம் வெளியாவதால் தற்போது போகன் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.