nithya

நடிகை நித்யா மேனன் தனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சில வகை படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.

2005ல் இருந்து சினிமாத்துறையில் இருப்பவர் நித்யா மேனன். தொடர்ந்து, மலையாள படங்களில் மட்டுமே பிஸியாக நடித்து வந்தார். சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, வெப்பம் படத்தில் நடித்தார். ஆனால், நித்யா மேனனுக்கான அடையாளம் இரண்டு படத்திலும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். நித்யா நடிப்பில் வெளியான ஒரிஜினல் தமிழ் படமும் இது தான். படத்திற்கும் செம அப்ளாஸ் கிடைத்தது. இதனால், இவருக்கு கோலிவுட்டில் கிரேஸ் அதிகரித்தது. இதை தொடர்ந்து, விக்ரமுடன் இருமுகன், சூர்யாவுடன் 24, விஜயுடன் மெர்சல் என மாஸ் காட்டினார். இதில், மெர்சல் படத்தில் மற்ற இரு நாயகிகளை விட அதிக வரவேற்பு கிடைத்தது நித்யா மேனனுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  இரண்டாவது முறையாக 100 கோடி கிளப்பில் இணையும் விக்ரம் ? இருமுகன் 5 நாள் வசூல் இதோ!

இந்நிலையில், நித்யா தனது சமீபத்திய பேட்டியில், எவ்வளவு கொடுத்தாலும், பெண்களை இழிவுப்படுத்தும் படங்களிலோ, வணிக ரீதியிலான படத்திலோ நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். என் கதை தேர்வும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒரு கதை சமூகத்திற்கு தேவையா? இல்லையா? நாம் நடித்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என பல விதமாக யோசிப்பேன். கதை பிடித்தால் போதும். என் கதாபாத்திரம் குறித்த முக்கியத்துவத்தை எதிர்பார்க்க மாட்டேன். அதை போல சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பிரபலங்களில் முதல் ஆள் நான் தான். அது எனக்கு பிடிக்காது என்பது இல்லை. சுத்தமாக புரியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  விரைவில் இயக்குனராகும் நித்யா மேனன் – ஹீரோ இவரா?