சிறந்த சீரியலுக்கான விருதை கைப்பற்றிய சன் டிவி சீரியல்.. 1000 எபிசோடை தாண்டி டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்த சீரியல்

sun-tv-logo
sun-tv-logo

Serial: என்னதான் திறமைகள் இருந்தாலும் அதை வெளிக் கொண்டுவர சரியான வாய்ப்பு வேண்டும். அதனால் அந்த வாய்ப்பை நோக்கி போராடுவது வழக்கம். அப்படி பல கனவுகளுடன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நுழைந்த எத்தனையோ பேர் சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். சிலர் போராட முடியாமல் பாதியிலேயே திரும்பப் போய் இருக்கிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் சாதிக்க முடியாமல் துவண்டு போன பல கலைஞர்களும் சின்னத்திரையில் மூலம் சாதித்துக் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக கிடைத்தது தான் சீரியல். அப்படி சீரியலில் நடித்த பிறகு ஒவ்வொருவரும் திறமைகளை காட்டி முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.

அத்துடன் நடிக்கும் கலைஞர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு எதுவென்றால் அவருடைய நடிப்புக்கு கிடைக்கும் விருதுதான். அதனால் தான் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக சன் டிவி நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பெஸ்ட் சீரியல் என்ற விருது சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடு தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. முக்கியமாக தொடர்ந்து டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தை தக்க வைத்து மக்கள் மனதை வென்றிருக்கிறது.

தற்போது கதை முன்னும் பின்னும் ஆக இருந்தாலும் இன்னும் இந்த சீரியலுக்கு மக்கள் அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் சன் டிவி குடும்ப விருதுகள் 2025 ஆம் ஆண்டு விழாவில் சிறந்த மெகா தொடர் விருதை கயல் சீரியல் பெற்றிருக்கிறது.

Advertisement Amazon Prime Banner