சென்னை : புதிதாக அமைய இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க, பெண்கள் புயலென கிளம்பி தும்சம் செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர்-சோமங்க‌லம் சாலையில், பூந்தண்டலம் சக்திநகரில் புதிய மதுபானக் கடையை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது என, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கடப்பாரை, சம்மட்டியுடன் சென்று, புதிய மதுபானகடைக்கு வைத்திருந்த சட்டரை அடித்தும், இடித்தும் தள்ளினர்.

அதோடு, சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுக்கடையை அப்பகுதியில் அமைக்காமல் இருக்க, மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
அதிகம் படித்தவை:  இந்த ராசிக்கார ஆண்களை மட்டும் நம்பிவிடாதீங்க – உஷார் பெண்களே!