India | இந்தியா
7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்.. பணம், நகை அபேஸ்
ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் கித்தலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணக்கார ஆண்களை திருமணம் செய்வது பின்பு கருத்து வேறுபாடு எனக்கூறி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகை வாங்கி விட்டு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
அந்த வரிசையில் ஏழாவதாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியை திருமணம் செய்து மோனிகா அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அந்த நபர் சுதாரித்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை எடுத்துக்கொண்டு காஜி பேட்டை போலீசார் மோனிகாவை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ஏழு பேரை திருமணம் செய்து அவரை ஏமாற்றியதும் மற்றும் அவர்களிடமிருந்து பணம் மற்றும், நகை பறித்தது தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக இருந்த தந்தை மற்றும் நண்பரே போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
