பார்ப்பதற்கு தங்களின் அண்ணன்களை போன்று இருக்கும் ஆண்களை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க பெண்கள் விரும்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பெண்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கிறது என்று ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அவர்களுக்கு முன்னர் அறிமுகம் இல்லாத ஆண்களின் போட்டோக்களை கொடுத்து அதில் பிடித்த ஆணின் போட்டோவை தேர்வு செய்ய வைத்துள்ளனர். அதாவது பேப்பரில் ஒரு புறம் சகோதரனின் புகைப்படமும், மறுபுறம் நான்கு ஆண்களின் புகைப்படமும் வைக்கப்பட்டன. அப்படி தேர்வு செய்த ஆண்களின் புகைப்படங்கள் தங்களின் சகோதரனின் முக அமைப்பை ஒத்தவையாக இருந்தன.

ஆய்வை நடத்தியவர்கள் இது பற்றி கூறும் போது, எல்லாப்பெண்களும் பெரும்பாலும் தங்களின் அண்ணனின் முக அமைப்பை ஒத்த ஆணின் போட்டோவை தான் தெரிவு செய்திருந்தனர் என்றும், முக சாயம் ஒத்திருப்பதால் அப்படி தேர்வு செய்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.