பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. வீடியோ ஆதாரத்துடன் போலீஸிடம் செல்லும் காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் தான் இருந்த கட்சியின் தலைவர் மீது நடிகை சோசியல் மீடியாவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். அதிலும் இப்போது கட்சியில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று, தன்னிடம் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை போலீஸிடம் ஒப்படைத்து புகார் அளிக்க உள்ளதாக ட்விட் செய்து பெரும் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார்.

சார்லி சாப்ளின் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம், அதன் பிறகு நிறைய படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆளும் கட்சியில் இணைந்து, தமிழ்நாட்டின் கலைஞருக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இப்படி 8 வருடங்களாக மூத்த உறுப்பினராக கட்சியில் இருந்த காயத்ரி ரகுமான் சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: இரண்டு திருமணம் செய்தும் விடாத ஆசை.. 61 வயதில் புது மனைவிக்கு எங்கும் அண்ணாமலை பட நடிகர்

ஏனென்றால் அவருக்கு எதிராக வார் ரூம் செயல்படுகிறது. கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை, சொந்தக் கட்சி ஆட்களையே கடுமையாக விமர்சனம் செய்கின்றனர், இந்த கட்சியில் இருக்க மாட்டேன் என்று பகிரங்க குற்றச்சாட்டை அடுக்கடுக்காக முன் வைத்தார் .

இவருனுடைய இந்த ஆவேசத்திற்கு காரணம் தமிழகத்தில் மத்தியில் ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தான். தற்போது அண்ணாமலைக்கும் காயத்ரிக்கும் பனிபோரே நிகழ்ந்து வருகிறது. இதன் அதிரடி முடிவாக காயத்ரி போலீசில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை அளித்து, அண்ணாமலை மீது புகார் அளிக்கப் போவதாகவும் ட்விட் செய்து அதில் போலிசரை டேக் செய்துள்ளார். விரைவில் போலீசாரிடம் புகார் அளிப்பேன் என்று காயத்ரி சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

Also Read: காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி.. சர்ச்சை பேச்சால் சிக்கிய பிரபலம்

ஏற்கனவே அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர், ட்விட்டரில் காயத்ரிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி பல நாட்களாக அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் காயத்ரிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கூறி கட்சியிலிருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன் பின்னால் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இப்போது அவர், ‘அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்’ என்றும் காட்டமாக விமர்சித்தார். இதனால் மீண்டும் மீண்டும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

Also Read: எல்லா படத்திலும் என்னோட கதி இதுதான்.. புலம்பும் விக்ரம் காயத்ரி!

அத்துடன் அண்ணாமலைக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வைத்திருப்பதாக மிரட்டி கொண்டிருக்கும் காயத்ரி ரகுமான், அதை போலீஸிடம் கொடுத்தால் நிச்சயம் பூகம்பம் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்