fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு!

Babar-Azam-Cinemapettai

Sports | விளையாட்டு

பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டிசம்பர் 18ஆம் தேதி தொடங்க உள்ளது.

மூன்று விதமான போட்டிகளுக்கும் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாமை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் பாபர் அசாம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார், செய்தியாளர்களை சந்தித்த அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் அந்தப் பெண் தன்னை 10 ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி வருவதாகவும், பாபர் அசாமின் இக்கட்டான காலக் கட்டங்களில் தான் பண உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஒரு சமயத்தில் தானும் பாபர் அசாமும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் தேசிய அணியில் இடம் கிடைத்ததும் பாபர் அசாம் திருமணம் செய்து கொள்ள யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் தனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கூறும் அந்தப் பெண், இது குறித்து புகார் அளிக்க ஒருமுறை முயன்றபோது தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போதுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் இருக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Babar-Azam-Cinemapettai1

Babar-Azam-Cinemapettai1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top