விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் ஆயத படையில் போலீசாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு செல்வக்குமார் விருது நகர் ஆஸ்பத்திரியில் இரவு பணியில் இருந்தார்.

அப்போது பெண் போலீஸ் ஒருவர் ஓய்வு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரை செல்வக்குமார் ஆபசமாக படம் எடுத்தாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு கொண்டீர்ருக்கும் "பாட்ஷா"

இதனை பார்த்த பெண் போலீஸ் திடுக்கிட்டு விழித்தார். பின்னர் இது குறித்து விருதுநகர் மாவட்ட போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து செல்வக்குமார் மீது துறைரீதியாக விசாரணை நடந்தது. அதில் அவர் பெண் போலீசை செல்போனில் படம் எடுத்தது தெரியவந்தது.

அதிகம் படித்தவை:  மாஸாக வந்திருக்கும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மோஷன் போஸ்டர்.!

விசாரணை அறிக்கையின் பேரில் செல்வக்குமாரை மதுரை சரக போலீஸ் டிஐஜி ஆனந்த் சோமானி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.