high contrast image of a hangman's noose

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சந்தோஷ் தாஸ்க்கும் , ரூபி தேவி என்பவருக்கும் திருமணமாகி உள்ளது அவர்களுக்கு  2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென சந்தோஷ் தாஸ் மரணமடைந்தார். சந்தோஷ் தாஸ் மரணமடைந்த பின்னர் ரூபி தேவி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இதனால் சந்தோஷ் தாஸின் பெற்றோர்கள் ரூபி தேவிக்கு சந்தோஷ் தாஸின் தம்பி மஹாதேவ் தாஸை திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தார்கள்.ஆனால் மஹாதேவ் தாஸுக்கு 15 வயது தான் ஆகிறது. அவர் கயா மாவட்டத்தின் பரையா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த திருமணத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மஹாதேவ் தாஸுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரை கட்டாயப்படுத்தி அருகில் உள்ள கோவில் ஒன்றில் அண்ணி ரூபி தேவியுடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் மனமுடைந்த மஹாதேவ் திருமணமான 2 மணி நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தற்போது காவல்துறை தகவல் அறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.