புதுடெல்லி : மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து 22 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லியில் சமய்பூர் பத்லி வரை செல்லும் மெட்ரோ ரயில் காலை 10.40 மணிக்கு கிதோர்னி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பிளாட் பார்ம் எண் 2ல் ஒரு ரயில் வந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் மீண்டும் புறப்பட்டது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 22 வயதான ஒரு பெண் திடீரென ரயிலின் முன் பாந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

 

தற்கொலை செய்து கொண்ட பெண் பற்றி விபரம் தெரியவில்லை, விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.