fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மிஷ்கின் இல்லாத படம் எங்களுக்கு வேண்டாம்.. விஷாலுக்கு ஆப்பு வைத்த தியேட்டர்காரர்கள்

vishal-myskkin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிஷ்கின் இல்லாத படம் எங்களுக்கு வேண்டாம்.. விஷாலுக்கு ஆப்பு வைத்த தியேட்டர்காரர்கள்

விஷால் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன். அதுவரை வெற்றி கிடைக்காமல் தடுமாறி வந்த விஷாலுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது இந்த படம்.

அதன்பிறகு அவர் நடித்த படங்களும் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. இரும்புத்திரை மட்டும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மீண்டும் வெற்றி பெற மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன்2 படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

இடையில் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பறிவாளன்2 படம் கைவிடப்பட்டது. எப்படியாவது இந்த படத்தை ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தானே அந்த படத்தை இயக்க முன்வந்தார் விஷால்.

ஆனால் அது தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பறிவாளன் படமே மிஸ்கின் இயக்கியதால் தான் வெற்றி பெற்றது எனவும் அவருடைய ஸ்டைலில் இல்லாத படத்தை வாங்க மாட்டோம் என தியேட்டர்காரர்கள் கூறியதாக தெரிகிறது.

சமீபத்திய பேட்டியில் கூட மிஸ்கின் விஷால் மீண்டும் தன்னை அழைத்தால் துப்பறிவாளன்2 படத்தை இயக்கி தருவதாக தெரிவித்திருந்தார். இருந்தாலும் விஷாலிடம் ஈகோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மிஷ்கின் ஸ்டைலை பார்த்து காப்பியடிக்க நினைத்து அதில் தவறு செய்து பணத்தை வீணாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

இதனால் தன்னுடைய ஈகோவை விட்டு விட்டு மீண்டும் மிஷ்கினுடன் சேர்ந்து துப்பறிவாளன்2 படத்தை விஷால் கொடுப்பார் என அவரது வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top