Connect with us

Cinemapettai

படவாய்ப்பு இல்லிங்க.. அதான் அப்படியே வண்டியை இந்த பக்கம் திருப்பி விட்டுட்டேன்.. பிக் பாஸ் அபிராமி

abirami-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படவாய்ப்பு இல்லிங்க.. அதான் அப்படியே வண்டியை இந்த பக்கம் திருப்பி விட்டுட்டேன்.. பிக் பாஸ் அபிராமி

கடந்த பிக் பாஸ் சீசனில் மீரா மிதுனுக்கு அடுத்ததாக அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர் அபிராமி. பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டால் சினிமா வாய்ப்புகள் வீடு தேடி வரும் என நம்பியவருக்கு மொத்தமாக ஊத்தி மூடியது அவரின் நடவடிக்கை.

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்ததுமே காதல் மன்னன் கவின் மீது ஆசை வந்ததாக உணர்ந்தார். பிறகு அப்படியே அந்த ஆசை கடந்த பிக் பாஸ் சீசன் வின்னர் முகேன் மேல் விழுந்தது. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என மக்கள் இடையிலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட நபராகவே மாறிய அபிராமியை கொஞ்சம் மாற்றியது தல நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான். இந்த படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் வலுவாக இருந்ததால் ரசிகர்களிடம் ஒரு நல்ல இமேஜை வளர்த்துக்கொண்டார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை தவிர வேறு எந்த படத்தின் வாய்ப்பும் கையில் இல்லாததால் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலைகாட்ட உள்ளார். இதனை பிரபல பாடகர் எஸ் பி சரண் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரம் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ்ல் முக்கிய நாயகியாக நடிகை அதுல்யா நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top