Sports | விளையாட்டு
WISDEN வெளியிட்ட சிறந்த டெஸ்ட் 11! கேப்டன் யார் தெரியுமா? இரண்டு இந்தியர்கள் உள்ளே
WISDEN (விஸ்டன்) – கிரிக்கெட்டின் பைபில் என்ற பெயரும் உண்டு. ஆண்டுதோறும் லண்டனில் இருந்து வெளியாகும் கிரிக்கெட் ரெபெரென்ஸ் புக்.
கடந்த 10 ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் லெவன் அணியை விஸ்டன் அறிவித்துள்ளது. இந்த பெஸ்ட் அணியை நியமிக்கப்பட்ட 5 பேர் (Lawrence Booth, Jo Harman, John ஸ்டேர்ன், Phil Walker & Yas Rana ) கொண்ட குழு தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த டீம்மில் இதில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

Kohli & Ashwin in Wisden test team
அலெஸ்டடர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), குமார் சங்ககரா (இலங்கை), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா) (கேப்டன்) , பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஏ பி டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) (விக்கெட் கீப்பர்) , ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்ரிக்கா), காகிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).
இப்பட்டியலில் கோலி சேர்க்கப்பட்டது ஆச்சர்யம் இல்லை, ஆனால் குக், ஸ்மித் இருக்கும் அணியில் இவரை கேப்டனாக நியமித்தது பெரிய ஆச்சர்யத்தையே பலருக்கும் தந்துள்ளது.
