vivegam
vivegam

‘விவேகம்’ படம் வெளியான மூன்று நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக நேற்று இரவிலிருந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.திரையுலக வட்டாரங்களில் நாம் விசாரித்தவரையில் சராசரியாக 30 முதல் 33 கோடியை மூன்று நாளில் வசூலித்து 100 கோடியை வசூல் தாண்டியிருக்கும் என்றே சொல்கிறார்கள்.இருந்தாலும் உலகம் முழுவதும் வசூலித்த தொகைதான் 100 கோடி ரூபாய். அதே சமயம் தமிழ்நாட்டில் இந்தப் படம் வியாபாரம் ஆன தொகையை வசூலித்தால் மட்டுமே படம் வாங்கிய அனைத்து ஏரியா வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபத்தைக் கொடுக்கும்.

‘விவேகம்’ படத்தின் தமிழ்நாடு ஏரியா வினியோக உரிமை சுமார் 55 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக பட வெளியீட்டிற்கு முந்தைய தகவல்கள் தெரிவித்தன.இந்த 55 கோடி ரூபாய் அசல் தொகையை வசூலிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு தியேட்டர்கள் மூலம் சுமார் 70 கோடி நிகர வசூல் ஆக வேண்டும். 70 கோடி நிகர வசூல் வரவேண்டும் என்றால் 95 கோடி வரையாவது மொத்த வசூல் தொகை இருக்க வேண்டும்.
18 சதவீத ஜிஎஸ்டி வரியை டிக்கெட் தொகையிலிருந்து கழித்தும், படத்தின் இதர செலவுகளைக் கழித்த பிறகுதான் நிகர வசூல் தொகை கணக்கிடப்படும்.தமிழ்நாட்டில் மொத்த வசூல் தொகை 95 கோடி ரூபாய் வசூலித்தால்தான் படத்தின் அசல் தொகை 55 கோடி கிடைக்கும் என்ற நிலையில் கடந்த 3 நாட்களில் தமிழ்நாட்டில் சுமார் 45 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்த வசூல் தொகையைத் தொட இன்னும் 50 கோடி வசூலித்தாக வேண்டும். இன்றைய வசூல் சுமார் 15 கோடியைத் தொட்டால் வரும் நாட்களில் 30 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும்.ajith vivegam

அதிகம் படித்தவை:  அம்மாடியோ ஒரே ஒரு முத்தத்திற்கு 19 ரீ டேக்கா.! முத்தத்தில் விளையாடிய பிரபல நடிகர்.!

அந்த 30 கோடி வசூலித்து முடித்த பிறகு வரும் வசூல் தொகைதான் படத்தின் லாபத் தொகையாகும்.இந்த நான்கு நாட்களில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏரியாக்களில் இப்படம் அசல் தொகையை வசூலித்து லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள்.ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா வெளிநாடுகளில் இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிடும் என்றே தகவல்கள் வருகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினிக்கு அடுத்தது சிவகார்த்திகேயன் தான் அஜித், விஜய் கிடையாது .!

மற்ற ஏரியாக்களின் வசூல் வார வேலை நாளான நாளை திங்கள் கிழமை முதல் எவ்வளவு வரப் போகிறது என்பதைப் பொறுத்தே படத்தின் வெற்றியும், வசூலும், லாபமும் நிர்ணயிக்கப்படும்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் திரையுலக வட்டாரங்களில் இருந்து திரட்டியவைதான். இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் தொகைகளை உண்மையான வசூல் நிலவரம்.
அதுவரை அனுமானங்களின் அடிப்படையில் இப்படியான வசூல் தகவல்கள் திரையுலகத்தில் பரவிக் கொண்டிருக்கும்.