Vishal-Varalaxmi-Sarathkumar-CinemaPettai
Vishal-Varalaxmi

இணையத்தளத்தில் இனி நடிகர்களை மோசமாக விமர்சனம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்று விஷால் பேசியதாக ஏற்கனவே நமக்கு வந்த தகவல்…

இந்த தகவலால்..இப்பொழுது விஷாலுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது..அது சரி விஷயத்துக்கு வருவோம்..

இணையதளத்தில் நடிகர்களை மோசமாக விமர்சிக்க கூடாது. ஆனால், அதே இணையதளத்தை, நடிகர் நடிகையர்கள் தன் ப்ரோமோஷனுக்காக மோசமாக பயன்படுத்தினால், என்ன நடவடிக்கைகளை விஷால் எடுப்பார் என்று ஒரு ரியாக்சன் எழுந்துள்ளது.

வரலட்சுமி கடத்தப்பட்டார் என்று ஒரு ஹேஷ் டேக் போட்டு வைரல் செய்தார்கள். இதனால் மீடியா மட்டுமில்லாமல் சமூகவலைத்தள மக்கள் உண்மையா? அல்லது ப்ரோமோஷனா? என்று குழப்பமுற்றார்கள்.

Varalaxmi-Sarathkumarஅப்படி ஒரு குழப்பத்தை இணையதளத்தில் உண்டாக்கிய தன் முன்னாள் காதலி வரலட்சுமியை விஷால் விமர்சிப்பாரா? நடவடிக்கை எடுப்பாரா? என்ன செய்ய போகிறார் நடிகர் சங்கத்தின் செயலாளர்?

சட்டம் எப்போதும் ஒரு பக்கம் மட்டும் இல்லை விஷால் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.