நடிகர்கள் அரசியலுக்கு சாதாரணமாக வரமுடியும் என்பது மக்கள் கருத்து. அப்படி பல கோடி மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவரோ அந்த பேச்சுக்கே இடமில்லை என்கிறார். இன்னொரு பக்கம் இளையதளபதி விஜய் அரசியலில் நுழைய வேண்டும் என்று பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில், ஒரு நடிகராக இருந்தால் எளிதாக அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இப்போது அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விஜயை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன்.

ஆனால் தற்போது உள்ள வியாபார அரசியல் சூழ்நிலையில் அவரை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என்றார்.