தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தை எடுப்பது தற்போதெல்லாம் மிகவும் எளிது. ஆனால், அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் தான் பலரும் தவித்து வருகின்றனர், இவை சிறு பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே நிகழ்வது இல்லை, பல பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களும் இதில் சிக்கியுள்ளது. அந்த வகையில் படம் எடுத்துமுடித்துவிட்டு பல நாட்கள் கழித்து ரிலிஸாகியும், ரிலிஸாகாமலும் இருக்கும் படங்கள் எது என்பதை பார்ப்போம்.

என்னை தாலாட்ட வருவாளா

ரவீந்திரன் இயக்கத்தில் அஜித் 1996-ல் நடித்த படம் என்னை தாலாட்ட வருவாளா, இப்படம் என்ன காரணம் என்று தெரியவில்லை, படம் எடுத்து முடித்து பல வருடங்கள் கழித்து தான் ரிலிஸாகியது, இப்படம் 2003-ம் ஆண்டு ரிலிஸாகி பெரிதும் வரவேற்பு பெறாமல், படம் வந்ததா? என்ற நிலை உருவாகியது.

உதயா

இளைய தளபதி தொடர் ஹிட் கொடுத்த நேரத்தில், மணிரத்னத்தின் உதவி இயக்குனர் அழகம் பெருமாள் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை ஒரு வருடம் கழித்து தான் இப்படம் தாமதமாக ரிலிஸாகியது, படமும் தோல்வியை தழுவியது.

வரலாறு

அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம், அவருக்கு பல விருதுகளை வாங்கித்தந்த படம், ஆனால், இந்த படம் ரிலிஸ் தேதி அறிவித்து பின் படம் வரவே வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியது, பிறகு அஜித் தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து படம் ஒரு வழியாக வந்து வெற்றியும் அடைந்தது.

பீமா

விக்ரம் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பீமா ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை, இப்படம் சுமாராக இருந்தாலும், படத்தின் ரிலிஸ் தாமதம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை சோதித்தது, அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

வாலு

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக முறை ரிலிஸ் தேதி கூறி ரிலிஸாகாமல் தள்ளிச்சென்ற படம் வாலு தான், இப்படம் எடுத்துமுடித்து சில வருடங்கள் கழித்து ரிலிஸாகி தோல்வியை தான் சந்தித்தது.

ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றார், ஆனால், ரஜினிமுருகன் இவரையே கொஞ்சம் சோதித்தது, படம் குறைந்தது 5 முறை ரிலிஸ் தேதி அறிவித்து மாற்றிக்கொண்டே இருந்தனர், ஆனால், படம் ஒரு வழியாக ரிலிஸாக செம்ம ஹிட் அடித்தது.

மதகஜராஜா

படம் எடுத்து முடித்து ட்ரைலர் வெளியிட்ட 3 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால், தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக படம் இன்னுமே ரிலிஸாகமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளது, விஷால் பல முறை முயற்சித்தும் இப்படம் வெளிவர முடியாமல் தவிக்கின்றது.

இடம் பொருள் ஏவல்

விஜய் சேதுபதி-சீனுராமசாமி கூட்டணியில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை என ஹிட் படங்களை தொடர்ந்து அடுத்து ஹாட்ரிக் அடிக்கவே ரெடியாகிவிட்டனர், ஆனால், இவர்கள் கூட்டணியில் இடையில் இடம் பொருள் ஏவல் என்ற படம் எடுத்து முடித்து சில வருடமாகிவிட்டது, இந்த படம் வருமா? வராதா? என்ற நிலை படத்தின் இயக்குனருக்கே தெரியாது.

உள்ளம் கேட்குமே

ஆர்யா தமிழ் சினிமாவின் முதன் முறையாக அறிமுகமாகிய படம் உள்ளம் கேட்குமே தான், ஆனால், இப்படத்திற்கு முன்பே ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படம் ரிலிஸாகிவிட்டது, உள்ளம் கேட்குமே பல ரிலிஸ் தேதி அறிவித்து சில மாதங்கள் கழித்து படம் வெளிவந்து ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடியது, பின் மீண்டும் படத்தை ரீரிலிஸ் செய்த போதே வரவேற்பு பெற்றது.