செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஜெயம் ரவி-ஆர்த்தி மீண்டும் இணைவார்களா? கடைசி பேச்சுவார்த்தையில் நடந்தது இதுதான்

கோலிவுட் சினிமாவில் சமீப காலமாக விவாகரத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரத்தில் சமாதன பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதை இதில் பார்க்கலாம்.

ஜெயம் படத்தில் ஆரம்பித்து, தனி ஒருவன் பட வெற்றி நடைபோட்டவர் ஜெயம் ரவி. சாக்லெட் பாயாக வலம் வந்து எல்லோரையும் கவர்ந்தார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஜெயம்ரவி – எம் ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதமர் படம் வெளியாகி கலவையான விமரனங்களை பெற்றது. இப்படத்தை அடுத்து, ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய இரண்டு படங்களில் ஜெயம் ரவி கவனம் செலுத்தி வருகிறார். இவ்விரு படங்களுகும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் சிங்கில், ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியாகி வைரலானது.

ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு

சினிமாவில் கிளீன் இமேஜுடன் வலம் வரும் ஜெயம் ரவி 2 மாதங்களுக்கு முன் தன் காதல் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறவிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதியர் பிரியப் போவதாக அறிக்கை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், குடும்பல நலன் கருதி இம்முடிவு எடுத்திருப்பதாக ஜெயம் ரவி கூறியிருந்தார். அதன்பின், ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், இது முழுக்க ஜெயம் ரவி எடுத்த தனிப்பட்ட முடிவு. தனக்கு எதுவும் இதுகுறித்து தெரியாது, அவரது முடிவால் தானும் தன் குழந்தைகளும் செய்வதறியாது இருப்பதாகவும், அவரிடம் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயம்ரவி விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். உடல் நலப்பிரச்சனையால் நேரில் ஆஜராக முடியவில்லை எனக் கூறி அன்று, காணொளி காட்சி மூலம் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இவ்வழக்கு வரும் நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி, ஒரு மணி நேரம் ஜெயம்ரவி – ஆர்த்தி இருவரும் பேசினர். ஆனால் இருவருக்கும் சமரசம் எட்டப்படவில்லை. இத்தொடர்ந்து வரும் டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் போது, பிரச்சனைக்கு பேசித் தீர்வு காண வேண்டும் என்று கருத்துகள் கூறி வருகின்றனர். எனவே டிசம்பர் 7 ஆம் தேதி இவ்விவகாரத்தின் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.


- Advertisement -

Trending News